அஜித்தின் ஆட்டோகிராப் கிடைக்கிறது எல்லாம் வரம்.. வைரலாகும் ஏகே லேட்டஸ்ட் போட்டோ

Ajith : கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அஜித்தின் புகைப்படங்களை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். அத்தி பூத்தார் போல் ஏதாவது நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொண்டால் அந்தப் புகைப்படம் தான் வெளியாகிக் கொண்டிருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக தினமும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில் சில காரணங்களினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் உள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-latest-photo
ajith-latest-photo

கேப்பில் ஆட்டோகிராப் போட்ட அஜித்

சமீபத்தில் அவருக்கு சின்ன ஆபரேஷன் நடந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அஜித் பைக் பயணம் மேற்கொண்டு இருந்தார். இப்போது ரசிகர் ஒருவர் தன்னுடைய கேப்பில் அஜித்தின் ஆட்டோகிராப் வாங்குகிறார்.

அஜித்தும் சிரித்துக் கொண்டே ரசிகர் இடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மேலும் அஜித்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. ஆகையால் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment