எம்ஜிஆர் போல தகதகவென இன்னும் அஜித்.. கொளுத்துற வெயிலுக்கு சில்லுனு ஒரு போட்டோ

Ajith : அஜித்தின் புகைப்படங்கள் தினமும் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் வருஷத்திற்கு ஒரு அஜித்தின் புகைப்படம் வெளியாகதா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போது நிலைமையே அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் தங்களது 24ஆவது திருமண விழாவை கொண்டாடி இருந்தனர். அப்போது எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

எம்ஜிஆர் போல் மின்னும் அஜித்

ajith
ajith

இப்போது எம்ஜிஆர் போல தகதகவென மின்னும் அஜித்தின் புகைப்படம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆரம்ப காலங்களில் கருப்பாக உள்ள நடிகர்களை மட்டுமே ரசிகர்கள் வரவேற்று வந்தனர். அதன் பிறகு எம்ஜிஆர் அந்த பிம்பத்தை உடைத்தார்.

அஜித்தின் ட்ரெண்டிங் புகைப்படம்

ajith
ajith

அவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிய நிலையில் அடுத்ததாக ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் மீண்டும் கருப்பு ஹீரோக்களாக சினிமாவை ஆட்சி செய்தனர். அப்போது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கமல் மீண்டும் அந்த இடத்தை நிரப்பினார்.

மாஸ் காட்டும் ஏகே

ajith-casual-click
ajith-casual-click

அதற்கு அடுத்தபடியாக அஜித்தும் வெள்ளை நிறத் தோற்றத்துடன் வந்த நிலையில் ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் பிறகு அவருடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார்.

இப்போது எந்த டயட் மற்றும் மேக்கப் எதுவுமே இல்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் இப்போது மகிழ்த்திருமேனியின் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். எம்ஜிஆர் போல தகதகவென இன்னும் அஜித்.. கொளுத்துற வெயிலுக்கு சில்லுனு ஒரு போட்டோ

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →