அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபலம்

அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் இன்று தொடர்ந்து குதூகலமாக இருக்கிறார்கள்.

ஏனென்றால் அஜித்குமார் தொடர்ந்து இளைய தலைமுறை இயக்குனர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஹிட் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள்.

அந்த வகையில் மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படமே அஜித்துடன் என்பதால் கோலிவுட்டே உன்னிப்பாக கவனித்தது. அதன்படி, எப்போ ஷூட்டிங் தொடங்கியது என்று கேட்பது போல் விறுவிறுவென தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து, பிரசன்னா, அர்ஜீன் தாஸ் உள்ளிட்டோர் இதில் நடித்து வருவதால் இது ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் டிரைடராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் இதுவரை பாடல்கள் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், இன்னும் பாடல்களை ஷூட் செய்ய முடியாமல் இருந்த படக்குழுவினர், இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று கூறி இசையமைப்பாளரை மாற்றுவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஆதிக்கின் நெருங்கிய நண்பர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு மியூசிக் அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் அப்டேட்

அடுத்த ஒரு வாரத்தில் இப்படத்திற்கு 4 பாடல்களை இசையமைத்து தருவதாக ஒப்புக்கொடுத்து தீவிரமாக அஜித்திற்காக பாடல்கள் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றி கூரிய தயாரிப்பாளர் நவீன், கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இன்னும் 7 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியுள்ளது. விரைவில் இப்பட ரிலீஸ் தேதியை அறிவிப்போம். படமும் சூப்பராக வந்திருக்கிறது. தமிழில் எங்களது முதல் படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் துணிவு படத்துக்குப் பின் குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. அதேபோல் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் மே 1 ஆம் தேதி அவர் பிறந்த நாளில் ரிலீஸாகும் என தெரிகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment