நீங்கள் ஹீரோ இல்லை அவர் தான் ஹீரோ.. சிவாஜி முன் நாகேசை புகழ்ந்த பேசிய படம்

300க்கு மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரமிப்பூட்டும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புக்கு பெயர் போனவர், நடிப்பின் பல்கலைகழகம் என்று பல பெயர்களை எடுத்தவர். செவாலியே சிவாஜி என்ற உயரிய விருதுக்கு சொந்தக்காரர் .

அப்படி நடிப்புச் சக்கரவர்த்தி ஆகிய சிவாஜி கண்முன்னே நீங்கள் ஹீரோ இல்லை, நாகேஷ் ஆனந்தப்படுத்தும் உங்களை தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று அனைவரையும் புகழும் படி செய்துவிட்டார் நாகேஷ்.

அந்தப் படம் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் நடிப்பில் 1965ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான திருவிளையாடல் படம் தான். அந்த படத்தில் தருமி என்கின்ற ஏழைப் புலவன் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார் நாகேஷ்.

சிவாஜியே ஒரு கணம் நாகேஷை பார்த்து மிரண்டு விட்டாராம். தருமி கதாபாத்திரத்தில் சிவாஜியை கலாய்த்து தள்ளி விட்டாராம் அந்தப்படத்தில். இருப்பினும் இந்த படத்திற்காக நாகேஷ் வெறும் ஒன்றரை நாள் மட்டும் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

அதற்குள்ளே நாகேஷ் தருமி கதாபாத்திரத்தில் உரிய எல்லா காட்சிகளையும் நடித்துக் கொடுத்து விட்டாராம்.  இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடித்தபிறகு படக்குழுவினர்கள் அமர்ந்து இந்த படத்தை பார்க்கும்போது தருமி வரும் கதாபாத்திரத்தை சிவாஜி மீண்டும் மீண்டும் போடச்சொல்லி பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

இதில் நாகேஷ் படத்தில் சிவாஜியை கொஞ்சம் ஓவராக கலாய்த்து சேட்டை செய்திருப்பது சிவாஜியை மட்டுமல்ல இந்த படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்களிடம் இருந்தும் கைத்தட்டல் கிடைத்ததால், திருவிளையாடல் படத்தில் சிவாஜியை விட நாகேஷின் நடிப்பு தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்திருந்தது என சிவாஜி காதுபடயே பேசி உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →