உதயநிதியால் படாதபாடு படும் திரையுலகம்.. ஸ்டாலினிடம் செல்லும் பெரிய பஞ்சாயத்து

விஜய்யின் குருவி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதல்முறையாக தயாரித்தது. இதைத்தொடர்ந்து ஒருகாலத்தில் ரெட் ஜெயன்ட் மற்றும் சன் குடும்பத்தின் ஆதிக்கம், சினிமா துறையில் கொடிகட்டி பறந்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகித்தால் அதற்கு எதிராக பலர் செயல்பட்டு வந்தனர்.

இதனால் பல தயாரிப்பு நிறுவனமும் பெரிய சரிவை சந்தித்தது. இதனால்தான் கடந்த முறை தேர்தலில் இக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணம் எனவும் பெரும் அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக வெளியாகும் எல்லா படங்களையுமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்குகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் விநியோகித்தது. மேலும் தற்போது வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம் போன்ற படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது.

மேலும், தற்போது சிவகார்த்திகேயனின் டான், காத்துவாக்குல 2 காதல், பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களையும் ரெட் ஜெயிண்ட்டே பண்ணுகிறது. இந்நிலையில் விஜயின் பீஸ்ட், கமலஹாசனின் விக்ரம் படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு எல்லா படங்களையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பண்ணுவதால் மற்ற தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். மேலும் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். இதனால் கூடிய விரைவில் இந்த பஞ்சாயத்தை முதல்வரிடம் எடுத்துக்கொண்டு போவதாக யோசித்து வருகின்றனர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவர். இதனால் எந்த அளவுக்கு இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களுக்காக முதல்வர் இதைப்பற்றி யோசிக்கலாம் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →