7.6 கோடி பேர்.. தமிழ் ராக்ஸ்டார் செய்த மெகா சாதனை

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ராக் ஸ்டார் அனிருத் இருக்கிறார். இவரது லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் உள்ளது.

நிற்க நேரமில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் அனிருத், தற்போது தீவிரமாக விடாமுயற்சி படத்துக்கான இசையமைப்பு பணிகளில் இருக்கிறார்.

இவர் இசைமைக்கும் பாட்டுக்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆகும் நிலையில், most wanted music director-ஆக அனிருத் இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி,தெலுங்கு,ஹிந்தி என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

இவருக்கு என்று மிகப்பெரிய fan பேஸ் உள்ளது. அதுவும் 80ஸ் கிட்ஸ்க்கு எப்படி இளையராஜாவும், 90ஸ் கிட்ஸ்-க்கு ரஹ்மான் யுவன் ஹாரிஸ் உள்ளார்களோ அதே போல 2கே kid-சின் கடவுளாக அனிருத் பார்க்க படுகிறார்

இந்த நிலையில், இவர் அடுத்து ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

7.6 கோடி பேர்

விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லீ, தளபதி 69, கூலி, ஜெயிலர் 2, SK23, விக்ரம் 2, இந்தியன் 3, கைதி 2, VD 12, மேஜிக் என்று பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இதற்க்கு நடுவில், ஆக்கோ என்ற படத்தில் வேறு இவர் நடித்து, அந்த படம் 2025 மே மாதம் வெளியாகும் என்றெல்லாம் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரது பாட்டு spotify app-ல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களாக உள்ளது. குறிப்பாக தமிழ் audience மட்டுமின்றி, உலகளவில், அதிகமான மக்கள் இவரது பாடல்களை கேட்டு ரசித்துள்ளனர்.

அப்படி 2024-ல் அனிருத்தின் பாடல்களை உலகம் முழுக்க 7.6 கோடி மக்கள் கேட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு ராக்ஸ்டார் செய்த ஒரு மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment