அவாளுக்குளாம் பனிஷ்மெண்ட்டே இல்லையா பாட்டி.. என்னது? குட்டி அம்பி தளபதி குடும்பமா?

Vijay: அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்த சிறுவனை ஞாபகம் இருக்கா? அப்பாவியாக மொழு மொழுவென்று இருக்கும் குட்டி அம்பி அவரது, க்யூட்டான நடிப்பால் மக்களை கவர்ந்தார். இன்றளவும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் மீம் டெம்ப்லேட்டாக இருக்கிறார்.

இவரை பற்றி யோசித்தாளே, “தாரிராரோ…தாரிராரோ” என்ற பாடல் தான் ஞாபத்திற்கு வரும்.. மேலும் இவர், “அவாளுக்குளாம் பனிஷ்மெண்ட்டே இல்லையா பாட்டி,” என்று அப்பாவித்தனமாக கேட்பது பார்பதற்க்கே அழகாக இருக்கும்.

இந்த குட்டி அம்பி வெங்கட் பிரபு படத்தில் நடித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் இந்த குட்டி அம்பியின் பெயர் விராஜ். நடிகர் விராஜ் சிறுவயதில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

குட்டி அம்பி தளபதி குடும்பமா?

தற்போது இவருக்கு 30 வயது ஆகி இருக்கும். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அந்த படத்தின் 2ஆம் பாகத்திலும் நடித்திருப்பார்.

விராஜ் மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விஜய்யின் அம்மாவான ஷோபாவும், விராஜின் தந்தையும் பிரபல பாடகருமான எஸ்.என். சுரேந்தரும் உடன் பிறந்தவர்கள். விஜயின் சொந்த தாய் மாமன் மகனாக இருந்தும், தளபதி பெயரை பயன்படுத்தி இவர் இதுவரையில் வாய்ப்பு கேட்டது இல்லை..

தனது, தனித்துவமான நடிப்பையும், தன் உழைப்பையும் நம்பியே இவர், இதுவரையில் சினிமா பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்றளவும், நான் விஜய் சொந்தக்காரன் என்று அவர் எப்போதுமே குறிப்பிட்டது கிடையாது. தற்போது இவர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →