சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா.. புது தொழிலை வைத்து கல்லா கட்ட பக்கா பிளான்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல 2 காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் உடன் நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவைத் தாண்டி தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தற்போது உள்ள நடிகைகள் தங்களது மார்க்கெட் உள்ளபோதே பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நயன்தாரா ஏற்கனவே 40 கார்ப்பரேட் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தொழிலில் ஆரம்பித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட லிப் பாம்களை அறிமுகப்படுத்தி இருந்தார். இவ்வாறு ஒரு பிசினஸ்வுமன் ஆகவே மாறி வரும் நயன்தாரா தற்போதும் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அடிக்கடி துபாய்க்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது துபாயில் முதலீடு மற்றும் ஒரு பெட்ரோல் கிடங்கு வாங்க உள்ளார். இது தவிர தமிழ்நாட்டில் ஒரு மசாலா நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார். இந்த மசாலா நிறுவனம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்த தொழில் தொடங்கி நயன்தாரா நல்ல லாபம் பார்த்து வருகிறார். இதனால் சினிமாவை காட்டிலும் தொழிலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இப்படியே போற போக்க பார்த்தால் நயன்தாரா முழுநேர பிஸினஸ் வுமன் ஆக மாறி விடுவார் போல. இப்படி அடுத்தடுத்த தொழிலில் கல்லா கட்ட பக்கா ப்ளான் போட்டதால் சினிமாவை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →