ஹீரோக்களை தோலுரித்த அருண் பாண்டியன்.. மேடையிலேயே பங்கம் செய்த பரிதாபம்

90களில் தமிழ் சினிமாவின் வாட்டசாட்டமான ஹீரோவாக இருந்த நடிகர் அருண்பாண்டியன், அதன் பிறகு இயக்குனராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர். இவருடைய ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தளபதி விஜயின் வில்லு, தல அஜித்தின் ஏகன், ஜெயம் ரவியின் பேராண்மை உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் வெளியானது.

இப்பொழுது அந்த நிறுவனம் அந்த அளவிற்கு படங்கள் அவ்வளவாக தயாரிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. தற்போது நடிகர் கருணாஸ் நடித்து தயாரித்த ஆதார் என்ற படத்தில் நடிகை ரித்விகா, இனியா, உமா ரியாஸ் இவர்களுடன் அருண் பாண்டியனும் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில், ஐங்கரன் பிலிம்ஸ் ஓனரும், நடிகருமான அருண் பாண்டியன் இந்த கால கட்டத்தில் உள்ள தமிழ் சினிமாவை தோல் உரித்து பேசியுள்ளார். அவர்கள் நடிக்கும் காலத்தில் படத்தில் மொத்த பட்ஜெட்டில் இருந்து 10% தான் ஹீரோக்களுக்கு சம்பளமாக இருக்கும்.

இப்படித்தான் அந்த காலகட்டத்தில் படத்தில் தரம் இருந்தது. ஆனால் இப்பொழுது நடிகர்கள் பட பட்ஜெட்டில் இருந்து 90% சம்பளமாக கேட்கிறார்கள். இவ்வளவு சம்பளம் கொடுக்க நேரிட்டால் படம் எப்படி நன்றாக வரும்.

தமிழ் சினிமாவில் மட்டும்தான் இப்படி ஒரு நிலை நீடிக்கிறது, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் கதாநாயகன்கள் படத்திற்கு படம் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றுவதில்லை. ஆனால் தமிழ் ஹீரோக்கள் அதற்கு எதிர்மாறாக இருக்கின்றனர்.

அத்துடன் பாரதிராஜா படம் எடுத்த காலம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும்,  இப்பொழுது ஹீரோக்கள் அதிகமாக சம்பளம் கேட்பதால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் நொந்துபோய் வருகின்றனர் என ஆதார் பட இசை வெளியீட்டு விழாவில் அருண்பாண்டியன் பேசியுள்ளார்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →