மதில் மேல் பூனையாய் தவிக்கும் அருண் விஜய்.. பாலா, அஜித் நடுவில் படும் பாடு

ஆரம்ப காலகட்டத்தில் தோல்வி திரைப்படங்களை கொடுத்து தடுமாறினாலும் இப்போது அருண் விஜய் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் நடித்து வந்த சூர்யா சில பிரச்சினைகளின் காரணமாக விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப்போது அருண் விஜய் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்க்காத அவரும் இப்படத்தில் நடிக்க சந்தோஷமாகவே சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு புது சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது. அதாவது அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவும் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த வேலைகளில் பட குழு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அருண் விஜய் இருக்கிறாராம். ஏற்கனவே இவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட இந்த வாய்ப்பை ஏற்பதில் அவர் தயக்கம் காட்டி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான்.

பொதுவாகவே பாலா தன் படத்தில் ஒரு ஹீரோவை கமிட் செய்து விட்டால் மற்ற படங்களில் அவரை நடிக்க விடமாட்டார். அதிலும் அருண் விஜய்க்கு அஜித் படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் நிச்சயமாக அவர் அனுமதிக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் பாலா மற்றும் அஜித் இருவருக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்தது.

அந்த வகையில் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் அருண் விஜய் மதில் மேல் பூனையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இந்த இரண்டு படங்களுமே அவருடைய கேரியருக்கு உறுதுணையாக இருக்கும். அதனால் அவர் தற்போது என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம். இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்காக அருள்நிதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →