வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய ஆர்யா.. உண்மை என்ன.?

Arya: நடிகர் ஆர்யா வருமானவரி துறையின் சோதனையில் சிக்கி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆர்யா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது அண்ணாநகர் உட்பட சென்னையின் முக்கிய ஐந்து இடங்களில் சீ ஷெல் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்யாவுக்கு சொந்தமான இந்த உணவகங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதை அடுத்து ஆர்யாவின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது என அடுத்தடுத்த தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

உண்மை என்ன.?

இதற்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த உணவகங்களை சில வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவருக்கு விற்று விட்டதாகவும் இப்போது அது தன்னுடைய உணவகம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்யாவிடம் இருந்து இந்த உணவகங்களை குன்ஹி மூஸா என்பவர் வங்கி இருக்கிறார். அவருடைய வீட்டிலும் தற்போது வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்குள் ஆர்யா ஐடி ரெய்டில் செய்து விட்டார் என செய்திகள் பரவி விட்டது. தற்போது அவர் தரப்பு விளக்கத்தால் இந்த பரபரப்பு அடங்கி இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →