Arya: நண்பனுக்காக மொத்த சொத்தையும் இறக்கும் ஆர்யா.. ரெடியாகிறது சூப்பர் ஹிட் பட செகண்ட் பார்ட் 

நடிகர் ஆர்யா, சினிமாவையும் தாண்டி பிசினஸில் கொடி கட்டி பறக்கிறார். ஆர்யாவுக்கு சொந்தமாக சென்னையில் “சீ  செல்”  என்னும் ஹோட்டல் இருக்கிறது. இதன் மூலமும் அவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். ஆர்யா “தி ஷோ பீப்பிள்” என்னும்  சினிமா  பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

பாஸ் என்ற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்யா தான். இப்பொழுது இன்னும் இரண்டு படங்களை நண்பன் சந்தானத்துக்காக இவரது தயாரிப்பு நிறுவனம் தான் கையில் எடுத்திருக்கிறது.

ரெடியாகிறது சூப்பர் ஹிட் பட செகண்ட் பார்ட் 

ஆர்யா தயாரிக்கும் படங்களின் ஹீரோவாக சந்தானம் தான் நடிக்கிறார். அதில் ஒன்று சந்தானம் நடித்து சூப்பர் ஹிட் ஆன “தில்லுக்கு துட்டு” படத்தின் இரண்டாம் பாகம். இதற்காக கதையையும் ரெடி பண்ணி விட்டாராம் இயக்குனர். கூடிய விரைவில் இந்த ப்ராஜெக்ட் டேக் ஆப் ஆகிறது.

 இரண்டாவது படத்தை வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டைரக்டர் கார்த்தி யோகி இயக்க விருக்கிறார். அடுத்ததாக சந்தானம் லிஸ்டில் இந்த இரண்டு படங்களும் சேர்கிறது. எப்படி பார்த்தாலும் சந்தானம் மூணு மாதத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

 ஏற்கனவே சந்தானம் மற்றும் ஆர்யா இருவரும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாவது பாகத்தை  பிளான் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இடையில் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் அந்த படம் ட்ராப்பானது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →