அஜித்தால் மட்டுமே இழுத்தடிக்கும் AK-62.. லியோவுக்கு போட்டினா சும்மா விட்ருவோமா!

அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறார் என்பது உறுதியான நிலையில் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அஜித் துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விக்னேஷ் சிவன் இந்த படத்தை லைக்கா தயாரிப்பில் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன் பிறகு ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதால் மகிழ்திருமேனி லைக்கா தயாரிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இதற்கான முன் பணத்தையும் லைக்கா மகிழ்திருமேனிக்கு கொடுத்துள்ளது. இந்த சூழலில் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

ஏனென்றால் கடந்த பொங்கல் பண்டிகைக்கு துணிவு, வாரிசு மோதிக்கொண்ட நிலையில் அஜித்துக்கு தான் வெற்றி கிடைத்தது. ஆகையால் மீண்டும் மோதிப் பார்க்க அஜித் தயாராக உள்ளாராம். இதனால் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் முதல் வாரத்தில் ஆரம்பித்து விட வேண்டுமாம்.

ஆனால் அஜித்துக்கு நிறைய பர்சனல் வேலைகள் உள்ளதாம். அதை எல்லாம் இப்போதே முடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளார். ஆகையால் ஏகே 62 படத்திற்கு குறிப்பிட்ட தேதி மட்டுமே கால்ஷீட் கொடுத்து இதற்குள் படத்தை முடித்து விட வேண்டும் என அக்ரீமெண்ட் போட சொல்கிறாராம்.

அதற்கு மேல் ஒரு நாள் கூட என்னால் அதிகமாக தேதிக் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். ஆனால் மகிழ்திருமேனி தான் நினைத்தபடி படம் வரும் வரை திரும்பத் திரும்ப ஒரே காட்சியை எடுக்க கூடியவர். அஜித் படத்தில் அப்படி செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஆனால் அஜித் குறிப்பிட்ட தேதி மட்டுமே கொடுத்துள்ளதால் இந்த தேதியில் படத்தை எடுத்து முடிக்க முடியுமா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →