ரீ என்ட்ரியில் ரம்யா கிருஷ்ணன் குவித்த சொத்துக்கள்.. ராஜமாதாவின் இன்றைய மதிப்பு இத்தனை கோடியா!

Assets accumulated by Ramya Krishnan on re-entry: தென்னிந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் 13 வயதில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக குணச்சித்திர நடிகையாக கோலோச்சி வருகிறார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். நடித்தால் ஹீரோயின் ஆகதான் நடிப்பேன் என்று இல்லாமல் வாய்ப்பு குறைந்த சமயத்தில் குணசித்திர கதாபாத்திரம்,வில்லி, ஐட்டம் டான்ஸ் என அனைத்திலும் கட்டம் கட்டினார் நம்ம நீலாம்பரி. 

தமிழ் சினிமாவில் இவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தது என்றால் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த நீலாம்பரி தான், இதற்குப் பின் இவரது மார்க்கெட் எகிறியது. அம்மனாக நடித்த அதே நீலாம்பரி தான் ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களை பற்ற வைத்தார். 

ட்ரெடிஷனல் வெர்சஸ் மார்டன் என எந்த வகையான ஆடையானாலும் நமது ராஜமாதாவிற்கு பக்காவாக பொருந்தி விடும். இவரது டைம் பீரியடில் வந்த நடிகைகள் மூட்டை முடிச்சை கட்டிவிட, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இன்று 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் ரம்யா கிருஷ்ணன். 

53 வயசாகியும் இன்றுவரை சினிமாவில் ஏ கிரேட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பும் இவர் 68 லட்சம் மதிப்புடைய ஆடி,டொயோட்டோ, இன்னோவா என பலவகையான சொகுசு கார்களை தனது வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.

தக தக தக தங்க வேட்டை என தமிழகத்தையே ஆட்டி படைத்த நீலாம்பரிக்கு ஆடம்பர சொகுசு வீடுகள் தமிழக மற்றும் ஆந்திராவில் பல உள்ளது. இதன் மதிப்போ ஒவ்வொன்றும் ஏழு கோடிக்கும் மேல். சீரியல், சினிமா, ரியாலிட்டி ஷோ என எதையும் விட்டு வைக்காத ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மட்டுமே கிட்டதட்ட 80  கோடியிலிருந்து 100 கோடி வரை இருக்கும். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →