அட்லீக்கு அண்ணன் கொடுக்கப் போகும் பதவி.. ராயப்பனை வைத்து போட்ட ஸ்கெட்ச்

விஜய்-அட்லீ காம்போ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. அந்த ஒரு அடித்தளத்தை வைத்து பாலிவுட்டில் டாப் ஹீரோக்களான ஷாருக்கான் அடுத்து சல்மான் கானை வைத்து இயக்க உள்ளார், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வருகிறார் அட்லீ.

இது தமிழ் சினிமாவுக்கு பெருமைதான் அசிஸ்டன்ட் டைரக்டராக ஷங்கரிடம் வேலை பார்த்த அட்லீ தற்போது அவரை மிஞ்சிய சம்பளத்தை வாங்கி வருகிறார். இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அண்ணன் விஜய் தான் என்று ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டு வருகிறார்.

அதே போல தற்போது சத்தியபாமா யுனிவர்சிட்டி அட்லீ பெருமைப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டத்தை வழங்கியது. அந்த மேடையிலும் இந்த உயரத்திற்கு காரணம் தளபதி விஜய் தான். இந்த டாக்டர் பட்டத்திற்கு பின் பெரிய அரசியல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜேப்பியாரின் மகள் நடத்தும் கல்வி குழுமம் இயக்குனர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. அதே மேடையில் தளபதி விஜய் என்னோட அண்ணன், பிகில் ராயப்பன் கேரக்டர் ஜேப்பியாரை வைத்து உருவாக்கியது என அட்லீ விஜய்யை பெருமைப்படுத்தி பேசுகிறார்.

ஜேப்பியாரின் மருமகனுக்கு விஜய் தன் கட்சியில் பதவி கொடுத்திருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது, இந்த சம்பவம் நம்மளையும் சிந்திக்க வைக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது தளபதி விஜய்-யின் கட்சியில் அட்லீ-க்கு விரைவில் ஒரு பொறுப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ தற்போது சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ Subject படத்தை எடுத்து வருகிறார். சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது சாதாரணம்தான், இது போன்ற உச்சத்தில் இருக்கும் ஒரு இயக்குனர் விஜய்யுடன் இணைந்து இருப்பது இன்னும் பலம் தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →