திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. 5 நாட்களில் பல நூறு கோடியை வாரிசுருட்டிய அவதார் 2

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திரைப்படம் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியானது. பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்த இந்த திரைப்படம் தற்போது வசூல் வேட்டையில் பல சாதனைகள் புரிந்து வருகிறது.

அந்த வகையில் 7500 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே 3500 க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதுவே பாக்ஸ் ஆபிஸை மிரள விட்ட நிலையில் தற்போது ஐந்து நாட்களில் இப்படம் 5000 கோடியை வசூலித்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் சென்றால் படத்தின் மொத்த பட்ஜெட்டும் வசூல் ஆகிவிடும். அதிலும் கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்று அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் வர இருப்பதால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்தியாவில் மட்டுமே இப்படம் இதுவரை 160 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இப்படத்தின் வசூல் குறைவு என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இப்படத்திற்கான வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே இப்படம் பாக்ஸ் ஆபிஸின் பல சாதனைகளை அசால்டாக அடித்து நொறுக்கி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ள படு மிரட்டலான விஷுவல் காட்சிகள் தான். இதுதான் படம் பார்ப்பவர்களுக்கான வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே இதன் முதல் பாகம் பலரையும் மிரட்டிய நிலையில் இந்த இரண்டாம் பாகம் அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் அதிரபுத்திரி ஹிட் அடித்துள்ள இந்த அவதார் 2 வின் அடுத்த பாகம் 2024 ஆம் ஆண்டு வெளிவர இருக்கிறது. அதற்கான எதிர்பார்ப்பும் இப்போதே ஆரம்பித்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →