நடிகை மீது தீராத காதலால் அஜித் செய்த மட்டமான வேலை.. உச்சகட்ட கோபத்தில் பேக்கப் பண்ணிய மிஸ்டர் மெட்ராஸ்

Ajith fell in love with the actress: படங்களில் ஒன்றாக நடிக்கும் பொழுது ஏற்பட்ட பிரியத்தால் நடிகர் மற்றும் நடிகைகளுக்குள் காதல் மலர்ந்து விடுகிறது. அந்த காதல் சிலருக்கு திருமணத்தில் போய் முடிகிறது. இன்னும் சில பேருக்கு காதல் பாதியிலேயே தோற்றுப் போய் விடுகிறது. அந்த வகையில் அஜித்தின் காதலும் கடைசிவரை ஒன்று சேர முடியாமல் பாதியிலேயே முடித்து போய்விட்டது.

அதாவது 90 இல் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹீரா மீது அஜித்திற்கு தீராத காதல் வந்திருக்கிறது. அந்த வகையில் இவர்களுடைய காதல், காதல் கோட்டை படத்தின் மூலம் ஆரம்பித்து இருக்கிறது. அதனாலேயே இவர்கள் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலமே ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது இவர்கள் காதலிக்கிறார்கள் என்று.

அது மட்டும் இல்லாமல் ஹீராவுடன் விடிய விடிய போன் பேசுவதும், லெட்டர் மூலம் காதலை வெளிப்படுத்துவதும் போன்ற லீலைகளை அஜித் செய்து வந்திருக்கிறார். ஆனால் இவர்களுடைய காதலுக்கு போட்டியாக இடையில் புகுந்தவர் தான் மிஸ்டர் மெட்ராஸ் சரத்குமார். இவர் ஹீரோ-வுடன் சேர்ந்து தசரதன், நம்ம அண்ணாச்சி போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அதன் மூலம் சரத்குமாருக்கு, ஹீரா மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தொடர்ந்து லவ் டார்ச்சரும் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் அஜித் மற்றும் சரத்குமார் அவர்களுடைய காதலை நிரூபிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் சரத்குமாரை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக அஜீத், ஹீராவை காரில் அழைத்துக் கொண்டு சரத்குமார் நடிக்கும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார்.

போனது மட்டும் இல்லாமல் சரத்குமார் பார்க்க வேண்டும் என்பதற்காக கார் லைட்டை போட்டுக் கொண்டு, ஹீராவுடன் நெருங்கி பழகுவதும் கொஞ்சுவதுமாக இருந்திருக்கிறார். இதை பார்க்க முடியாத சரத்குமார் இப்பொழுது எந்த படப்பிடிப்பும் வேண்டாம் பேக்கப் பண்ணி விடலாம் என்று உச்சகட்ட கோபத்தை காட்டி இருக்கிறார். அதன்பிறகு சரத்குமார், அஜித்தின் காதல் விஷயத்தில் தலையிடவே இல்லை.

அதன் பிறகு அஜித் மற்றும் ஹீரா ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள். பிறகு இவருடைய காதலை கல்யாணத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு ஹீராவின் பெற்றோர்கள் சம்மதத்தை தெரிவிக்காததால் அஜித்திற்கு மிகப்பெரிய ஏமாற்றமாக முடிந்து விட்டது. அதற்கு பிறகு ஷாலினியை காதலித்து கரம் பிடித்து விட்டார். ஆனால் இன்னும் ஹீரா கல்யாணம் பண்ணாமல் சிங்கிளாக தான் இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →