பயில்வான் மீது புகார் கொடுத்த பிரபல நடிகை.. இது நமக்கு தேவதானா

திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் தற்போது கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையின் ரகசியங்களை சமூக வலைதளங்கள் மூலமாக வீடியோவாக பதிவிட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன்.

இதனிடையே சமீபத்தில் திரைப்பட பின்னணி பாடகியான சுஜித்ராவைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறாகப் பேசியதால் கோபமடைந்த சுசித்ரா, பயில்வானுக்கு போன் செய்து நாக்கில் நரம்பில்லாமல் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என சரமாரியாகத் திட்டித் தீர்த்தார். இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வைரலான நிலையில் போலீசில் பயில்வான் மீது புகார் கொடுக்கப் போவதாக சுசித்ரா தெரிவித்திருந்தார்.

தற்போது சுசித்ரா கமிஷனர் ஆபீஸில், பயில்வான் ரங்கநாதன் மீது புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், தன்னையும் நடிகர், நடிகைகளை பற்றி தேவையில்லாமல் அவதூறாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்யுமாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தற்போது பயில்வான் ரங்கநாதனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று, அவர் யாரைப் பற்றி எல்லாம் தவறாக பேசினாரோ, அதுகுறித்த வீடியோக்களை பார்த்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை, அவர்களின் குடும்ப நிலை என அனைத்தையும் சரியாக ஆலோசிக்காமலும், அவர்களின் அனுமதியில்லாமலும் பயில்வான் ரங்கநாதன் பேசுவதாக சமீபத்தில் அவர் மீது பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் பயில்வானிடமிருந்து நடிகர், நடிகைகளின் ரகசியங்களை கேட்பதற்காகவே பல யூடியூப் சேனல்கள் பயில்வான் வீட்டு வாசலின் முன்பு நின்று அவரது கால்ஷீட்டை கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இவரது வீடியோக்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். சில கமெண்டுகளும் பயில்வானுக்கு சாதகமாகவே அமையும்

இந்நிலையில் பயில்வான், இதனை பயன்படுத்தி பல திரைப்பட பிரபலங்களை பற்றி பாரபட்சமில்லாமல் பத்திரிக்கையில் பார்த்ததாகவும், அவர் சொன்னார்,இவர் சொன்னார் என்றும் பல ரகசியங்களை வெளிப்படையாக கூறி தற்போது கைதாகும் அளவுக்கு வசமாக மாட்டியுள்ளார். ஏற்கனவே பயில்வான் ரங்காநாதன் மீது பல பிரபலங்கள் காண்டாக உள்ள நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவு கொடுக்க கூட யாரும் இல்லாத நிலையில் தற்போதுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →