விஜய் அண்ணா யாருமே யோக்கியம் இல்ல போலையே! அந்தரங்க புகார் எதிரொலி, பீஸ்ட் பட பிரபலத்திற்கு கட்சியும் வேலையும் போச்சு

சமீபத்தில் 2022ம் வருட திரைப்படத்திற்கான விருதினை மத்திய அரசு அறிவித்தது. இதில் சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கில் அலா வைகுண்டபுரமுலோ திரைப்படத்தில் இடம்பெற்ற புட்டா பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்-யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடனம் வடிவமைத்தவர் நடன இயக்குநர் ஜானி.

இவர் மீது 21 வயது பெண் ஒருவர் சைபராபாத் காவல்நிலையத்தில் அந்தரங்க புகார் அளித்தார். அதில் பல ஆண்டுகளாக ஜானி தம்மை வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து ஜானி மீது 3 பிரிவுகளில் நார்சிங்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கட்சியும் போச்சு, வேலையும் போச்சு என்பதை போல, “ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி மாஸ்டர் ஒதுங்கி இருக்க வேண்டும். “என்று ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விசாரணையின் முடிவில் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி எதிரொலியாக பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், மக்களுக்கு, சினிமா துறையை சேர்ந்தவர்கள் மீதுள்ள நம்பிக்கையும் மரியாதையும், நீர்த்து போக செய்கிறது. மேலும், மக்களுக்கு பலரின் உண்மை முகத்தையும், இந்த ஹேமா கமிட்டி திரையிட்டு காட்டியுள்ளது. அடுத்து அடுத்து, எந்தெந்த புள்ளிகள், சிக்க போகிறதோ.

இந்த புகாரின் பெயரில் ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பெரும்புள்ளிகளுக்கு பயத்தைக் காட்டி உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →