மகாராஜா நடிகர்களுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. தரம் பார்த்து கிப்டுகளை தெறிக்க விட்ட தயாரிப்பாளர்

இப்பொழுதெல்லாம் படம் 3 நாள் தியேட்டரில் ஓடிவிட்டால் சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையாக 100 நாட்களைக் கடந்து ஓடி உள்ளது மகாராஜா படம். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா கிட்டத்தட்ட 110 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். தயாரித்தது பேசன் ஸ்டுடியோஸ் ஜெகதீஷ் மற்றும் சுதன். இந்த படம் கொடுத்த அதிரிபுதிரி கலெக்ஷனல் தயாரிப்பாளர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள். நூறாவது நாளில் பங்க்ஷன் வைத்து எல்லோருக்கும் அட்டகாசமான கிப்டுகளை வழங்கியுள்ளார்கள்.

தரம் பார்த்து கிப்டுகளை தெறிக்க விட்ட தயாரிப்பாளர்

படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி படத்தில் நடித்த சில முக்கிய நடிகர்களுக்கு தற்போது வந்துள்ள ஐபோன்16 ரக உயர்ந்த பரிசை வழங்கியுள்ளனர். அது போக மற்ற சின்ன சின்ன நடிகர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.

இப்படி எல்லாரையும் மகிழ்வித்தனர் தயாரிப்பாளர் பேஷன் ஸ்டுடியோஸ். இவ்வளத்தையும் செய்து விட்டு இதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் ஆனால் நூறாவது நாள் விழா எடுத்தது லீலா பேலஸ் ஹோட்டலில். இதனால் பத்திரிக்கையாளர்கள் எளிதாக எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டனர்.

இந்த படத்திற்கு விஜய் சேதுபதிக்கு 20 கோடிகள் வரை சம்பளம் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு மட்டும் என்ன பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுபோக இந்த படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் எடிட்டர் பிலோமின் ராஜ், அவருக்கும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து உயர்ந்த பரிசு கிடைத்துள்ளது

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment