மிச்சர் மட்டும் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?. 42 நாட்களில் நிவாவுக்கு வாரி வழங்கிய பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வார எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறியுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் மாடல் அழகியான நிவா வாழ்க்கையில் பல துயரங்களைக் கடந்த தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார். ஆனால் இவருக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக நிவா பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சில நேரங்களில் மட்டுமே பேசும் நிவா சரியான கருத்துக்களை எப்போதுமே வைத்துள்ளார். ஆனால் போட்டி மற்றும் டாஸ்க் என்று வரும்போது அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. எப்போதுமே மிச்சர் சாப்பிடுவது போல, பிக் பாஸ் வீட்டில் நிவா இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரியவில்லை.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் மட்டுமே அவரை காண முடிகிறது. அதுமட்டுமின்றி அசல் கோலாறுடன் இவர் நெருங்கி பழகியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அசல் எலிமினேஷன் ஆன பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு நிவா ஆளானார்.

இப்போது தான் மீண்டும் பழையபடி மற்ற போட்டியாளர்களிடம் சமூகமாக பேச ஆரம்பித்தார். ஆனால் விளையாட்டில் கொஞ்சம் கவனமாக இருந்தால் இவர் இறுதி வரை செல்ல அதிக வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நிவாஷினிக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 42 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிவா குறைந்தபட்சம் 5 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் சும்மா மிக்சர் சாப்பிட்டதற்கு இவ்வளவா, இப்படி தெரிந்தால் நாங்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருப்போம் என கமெண்ட்களை தெரிவிக்கவிட்டு வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →