முதல்முறையாக பொதுமக்களும் கலந்து கொள்ளும் பிக் பாஸ் சீசன் 6.. எதிர்பார்ப்பை எகிற விடும் அப்டேட்

கடந்த ஐந்து சீசன்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அப்டேட் இணையத்தில் வைரலாக பரவுகிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த மாதம் அக்டோபர் 2-ம் தேதி கோலாகலமாக துவங்கப் போகிறது.

இதில் 17 முதல் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கப்போகிறது. ஏனென்றால் இதுவரை பிரபலங்கள் மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்தமுறை பொதுமக்களும் பிக்பாஸில் கலந்து கொள்ளலாம் என சமீபத்தில் ப்ரோமோ வெளியானது. இதனால் பொதுமக்களும் எதற்காக பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறோம் என்ற வீடியோவை விஜய் டிவி நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள்.

அதிலிருந்து பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் விஜய் டிவியில் மட்டும் இல்லாமல் டிஸ்னி பிளஸ் ஸ்டாரிலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆகையால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டா ஸ்டாரிலும், ஒரு மணி நேரம் எடிட்டிங் ஷோவை விஜய் டிவியிலும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே புதுவிதமாக இருக்கக்கூடிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைக் காண்பதற்காக ரசிகர்கள் மேலும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →