பொண்ணுங்களை தடவி ரொமான்ஸ் செய்தததற்கு சம்பளத்தை வாரி கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த வச்ச கோளாறு

ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சுவாரசியங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் 6 ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதிலும் பிக்பாசே எதிர்பார்க்காத அளவிற்கு போட்டியாளர்கள் இந்த சீசனில் ஏராளமான கன்டென்டுகளை வாரி வழங்கி கொண்டிருக்கின்றனர்.

இதுதான் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் சாந்தி மாஸ்டர் வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபராக இருந்த இவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது வீட்டை விட்டு வெளிவந்துள்ள அசலுக்கு பிக் பாஸ் கொடுத்துள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில் அசலுக்கு ஒரு நாளைக்கு மட்டுமே 15,000 முதல் 17,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. அதன்படி அசல் பிக் பாஸ் வீட்டில் மூன்று வாரங்கள் அதாவது 21 நாட்கள் இருந்துள்ளார். அதை வைத்து பார்க்கும் போது அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்து இருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 16,000 என்று வைத்துக் கொண்டால் கூட 21 நாளைக்கு அசல் 3,36,000 ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் ரொமான்ஸ் செய்வது, தடவுவது, கட்டிப்பிடிப்பது என்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்த அசல் இவ்வளவு சம்பாதித்து இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கிண்டலாக கூறி வருகின்றனர். பெண்களை தடவி ரொமான்ஸ் செய்ததற்கு இவ்வளவு சம்பளமா என்றும் பிக் பாஸ் கொஞ்சம் ஓவராக தான் சம்பளத்தை வாரி கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். எனினும் அசல் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →