ரோமியோவ காலி பண்ணியாச்சு அடுத்து ரத்னம் தான்.. கில்லிய வச்சு கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை

Blue Sattai Maaran: சோசியல் மீடியா சர்ச்சை பிரபலமாக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் எந்த ஹீரோவையும் விட்டு வைக்க மாட்டார். எல்லா படங்களையும் விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் கலாய்த்து தள்ளி விடுவார்.

அப்படித்தான் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ படத்தை இவர் பங்கம் செய்திருந்தார். இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி சரியான பதிலடி கொடுத்தார்.

ஆனாலும் விடாத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து அவரை சீண்டிக் கொண்டே இருந்தார். இதற்கு வலைப்பேச்சு பிஸ்மி கூட ஆதரவு தெரிவித்து அறிவு ஜீவி என ப்ளூ சட்டைக்கு ஜால்ரா தட்டி இருந்தார்.

விஷாலை சீண்டிய ப்ளூ சட்டை

இந்நிலையில் ப்ளூ சட்டை விஷாலை சீண்டியுள்ளார். இன்று அவருடைய ரத்னம் படம் வெளியாகி உள்ளது. அதை கலாய்க்கும் வகையில் கடந்த வாரம் ரோமியோவை கில்லி போட்டு தள்ளியது.

blue sattai maaran
blue sattai maaran

இந்த வாரம் ரத்னத்தை விட அதிக வசூலை பெறும் என அவர் ட்வீட் போட்டுள்ளார். தற்போது விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் தாறுமாறாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதை வைத்து தான் ப்ளூ சட்டை மாறன் விஷாலை கிண்டல் அடித்துள்ளார். இதற்கு ரத்னம் படகுழு தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →