தக் லைஃப் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை.. மணிரத்னத்திற்கு மட்டும் ஆதரவா?

Mani Ratnam : மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கடுமையான சரிவை சந்தித்தது. இதனால் கமலுக்கு பல கோடி நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் தக் லைஃப் படத்தை விமர்சித்திருந்தார். என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க என்று கழுவி ஊற்றி இருந்தார். அதோடு கேங்ஸ்டர் படம் என்பதை நம்ப வைக்க படத்தில் ஒரு சீன் கூட இடம்பெறவில்லை என்றும் விமர்சித்தார்.

ஆனால் இப்போது ப்ளூ சட்டை மாறன் மணிரத்னத்திற்கு ஆதரவாக பேசி இருப்பது பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. அதாவது தக்கலை தோல்வி குறித்து மணிரத்னம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதாவது நாயகன் போன்ற படத்தை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் இல்லை.

அத்தகைய படத்தைப் பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதீத எதிர்பார்ப்பு என்பதை கடந்து நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்று மணிரத்னம் விளக்கம் கொடுத்திருந்தார்.

மணிரத்னத்திற்கு ஆதரவாக பேசிய ப்ளூ சட்டை மாறன்

இதைதொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் மணிரத்னம் எப்போதுமே தற்பெருமை பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் பிரஸ் ஈவன்ட் மற்றும் பேட்டிகளில் படத்தைப் பற்றிய சப்ஜெக்ட் மட்டுமே பேசுவார்.

மேலும் தக் லைஃப் படம் தோற்றத்தில் கமலுக்கும் பங்கு இருந்தாலும் ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் மணிரத்னம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மணிரத்னம் போல தால் இயக்குனர் பாலாவும். படைப்புகள் தான் பேசவேண்டும். படத்தை தயாரித்தவர்களும், நடித்தவர்களும் தற்பெருமை பேசி அறுக்கக் கூடாது.

அதுவும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மேடைகளில் ஓவர் பில்டப் செய்து சக்சஸ் மீட் கொடுப்பதெல்லாம் கோமாளித்தனம் தான். இதுபோன்று செய்யும் இயக்குநர்கள், நடிகர்கள் மணிரத்னத்தை பார்த்து திருத்திக் கொள்ளுங்கள்.

இல்லையென்றால் நீங்களும் டரோல் மெட்டீரியல் ஆக நீங்களே காரணமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார். மேலும் மணிரத்னம் தான் செய்த தவறை ஒற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →