அத்தி பூத்தாற்போல் ப்ளூ சட்டை வாயிலிருந்து வந்த வார்த்தை.. லப்பர் பந்துக்கு கொடுத்த விமர்சனம்

Blue sattai Maran : நாளை தியேட்டரில் சசிகுமாரின் நந்தன், சதீஷின் சட்டம் என் கையில், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து என எக்கசக்க படங்கள் வெளியாகிறது. இந்தப் படத்தை சினிமா விமர்சகர்கள் பலரும் பிரிவியூ சோ பார்த்துவிட்டு தங்களது விமர்சனத்தை யூடியூபில் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் வாயிலிருந்து அத்தி பூத்தார் போல் லப்பர் பந்து படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். பொதுவாகவே ஓரளவு நன்றாக இருந்த படத்தையும் கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை பாராட்டி தள்ளி இருக்கிறார். தமிழரசு பச்சமுத்து என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் லப்பர் பந்து படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைத்துள்ளனர். கிரிக்கெட்டில் இவர்கள் இருவருக்கும் ஈகோ பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சண்டை முற்றி அடிக்கடி இருவரும் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

லப்பர் பந்து படத்திற்கு ப்ளூ சட்டையின் விமர்சனம்

ஆனால் அட்டகத்தி தினேஷின் மகளை தான் ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். தான் காதலிக்கும் பெண்ணின் அப்பா என்று தெரிந்தவுடன் ஹரிஷ் கல்யாண் என்ன செய்கிறார் என்பதுதான் லப்பர் பந்து. இப்படத்தில் சாதி ஒழிப்பு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக வெளியாகும் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு அப்பா அம்மாவே இருப்பதில்லை. இந்த படத்தில் அப்பா, அம்மா என்றெல்லாம் இருக்கிறார்கள். ஒரு ஈகோ கதையை கொண்டாலும் முழுக்க அதையே எடுத்துச் செல்லாமல் வித்தியாசமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

முதல் பாதி நன்றாக இருந்த நிலையில் இரண்டாம் பாதி எப்படி இருக்க போகிறதோ என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் சுவாரசியமாக இருந்தது. நேரம் கிடைத்தால் லப்பர் பந்து படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →