பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக வாங்கிய அல்லு அர்ஜுன், அட்லீ.. கொட்டிக் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

Allu Arjun: அல்லு அர்ஜுன் 22 வது படத்தின் அறிவிப்பு இன்று வர உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அட்லீ இயக்க இருக்கிறார். கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில் அட்லீயின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது. இது அடுத்து அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி போடுகிறார் அட்லீ. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

ஏனென்றால் படத்தின் மேக்கிங் மற்றும் விஎப்எக்ஸ் வேலைகள் பிரம்மாண்டமாக செய்ய இருக்கின்றனர். இதற்காகவே பல கோடிகள் செலவாகும் என்ற கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

அல்லு அர்ஜுன், அட்லீ இணையும் படத்தின் பட்ஜெட்

இதில் அல்லு அர்ஜுனனின் சம்பளம் 200 கோடியாகும். கடைசியாக இவர் நடித்த புஷ்பா 2 படத்திற்கு 300 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். ஆனாலும் இந்த படத்திற்கு தன்னுடைய சம்பளம் 100 கோடியை குறைத்து கொண்டுள்ளார்.

அடுத்ததாக படத்தின் இயக்குனர் அட்லீ 100 கோடி சம்பளம் பெறுகிறார். இவ்வாறு அல்லு அர்ஜுன், அட்லி ஆகியோரின் சம்பளம் படத்தின் பாதி பட்ஜெட் ஆக இருக்கிறது. இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் குழுவின் சம்பளம் 50 கோடியை தாண்டும்.

பொதுவாகவே அட்லீ பல வருடங்களாக ஒரு படத்தை எடுத்து வருவது வழக்கம். ஆனாலும் தரமான ஹிட் கொடுத்து விடுவார். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எவ்வளவு கேட்டாலும் கொட்டிக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment