2024 விகடன் சினிமா விருதுகள்.. பரிசுகளை வென்ற டாப் ஹீரோக்கள்

Vikatan Awards : ஒவ்வொரு ஆண்டும் விகடன் சினிமா விருதுகள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு திரைத்துறையில் நட்சத்திரங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை யார் விருதை பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை 2 மற்றும் மகாராஜா படங்களுக்காக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவி பெற்றிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த தயாரிப்பு என்ற பிரிவில் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் தேர்வாகி இருக்கிறது. இந்நிறுவனம் சூரியின் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜிவி பிரகாஷ் பெற்றிருக்கிறார். கடந்த வருடம் கேப்டன் மில்லர், தங்கலான் மற்றும் அமரன் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சிறந்த பாடலுக்கான இசையமைப்பாளர் விருதில் ஷான் ரோல்டன் பெற்றிருக்கிறார்.

2024ல் விகடன் விருதை வென்ற பிரபலங்கள்

இவர் லவ்வர் மற்றும் லவ்வர் பந்து ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். சிறந்த திரைக்கதை என்ற பிரிவில் நித்திலன் சாமிநாதன் மகாராஜா படத்திற்காக தேர்வாகி இருக்கிறார். விடுதலை 2 படத்தில் பணியாற்றிய கந்தசாமி, மணிமாறன், வெற்றிமாறன் ஆகியோர் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை பெற இருக்கின்றனர்.

நந்தன் படத்தின் கதையை எழுதிய சரவணன் சிறந்த கதை என்ற பிரிவில் தேர்வாகி இருக்கிறார். வாழை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேனி ஈஸ்வர் விருதை வென்றிருக்கிறார். சிறந்த படத்தொகுப்பு என்ற பிரிவில் பிலோமின் ராஜ் மகாராஜா மற்றும் பிளாக் ஆகிய படங்களுக்காக விருதை பெறுகிறார்.

சிறந்த சண்டை பயிற்சியாளர் என்ற பிரிவில் அன்பறிவு, ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் அமரன் படத்திற்காக தேர்வாகி இருக்கின்றனர். சிறந்த நடனம் என்ற பிரிவில் சாண்டி மாஸ்டர் வெற்றி பெற்றிருக்கிறார். சிறந்த அறிமுகம் இயக்குனருக்கான விருதை தமிழரசன் பச்சமுத்து லப்பர் பந்து படத்திற்காக பெற இருக்கிறார்.

சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை ஜமா படத்திற்காக பாரி இளவழகன் பெறுகிறார். சிறந்த அறிமுக நடிகை விருதை லவ்வர் படத்தில் நடித்த ஸ்ரீகௌரி பிரியா வாங்க இருக்கிறார். சிறந்த குணச்சித்திரன் நடிகர் கருணாஸ் மற்றும் சிறந்த குணசித்திர நடிகை ஸ்வாஸ்விகா ஆகியோர் பெறுகின்றனர்.

சிறந்த நகைச்சுவை நடிகர் பாலசரவணன், சிறந்த வில்லன் நடிகர் சேத்தன், சிறந்த வில்லன் நடிகை சிம்ரன், சிறந்த குழந்தை நட்சத்திரம் பொன்வேல், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் அரண்மனை 4, சிறந்த படக்குழு ஜமா மற்றும் சிறந்த பாடலாசிரியர் மோகன் ராஜா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

சிறந்த பின்னணி பாடகர் ஹரிஹரன், பாடகி சிந்தூரி விஷால், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, சிறந்த வெப் சீரிஸ் தலைமைச் செயலகம் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் சிறந்த என்டர்டைனர் என்று விருதை மெய்யழகன் படத்திற்காக கார்த்தி பெருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →