தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி.. நயன்தாராக்கு டஃப் கொடுப்பாங்க போல

சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்த விஷயம் நயன்தாரா சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றாரா என்பது தான். அதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பே நாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததாகவும், டிசம்பர் மாதமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி வாங்கி உள்ளதாக ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சர்ச்சைக்கு முன்பே வாடகை தாய் மூலம் தான் பாடகி சின்மயி குழந்தை பெற்றார் என்று சிலர் கூறி வந்தனர். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான ராகுல் ரவீந்தரை சின்மயை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 8 வருடங்களாக குழந்தை இல்லாத இந்த தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. சமூக வலைத்தள பக்கத்தில் திரிப்தா, ஷவ்வால் என தனது குழந்தைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் சின்மயின் கர்ப்ப கால புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் இவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றார் என சிலர் ஆணித்தரமாக கூறி வந்தனர். இதற்குச் சின்மயி, பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க எனக்கு தெரியும் என் குடும்பத்துக்கு தெரியும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் அந்தக் குழந்தைகளை நான் தான் 10 மாதங்கள் சுமந்து பெற்றேன் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

chinmayi

மேலும் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற சர்ச்சையை விட நிஜமாகவே கருவுற்ற குழந்தை பெற்ற சின்மயியை வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றார் என பலரும் விமர்சனம் செய்தார்கள். தற்போது இந்த சர்ச்சைக்கு எல்லாம் ஒரே புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →