பயந்து மறைத்து பேசும் தனுஷ்.. வச்சு செய்யும் பிரபலம்

Dhanush : தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதை காட்டிலும் படத்தின் விழாவில் தனுஷ் பேசியது தான் மிகப்பெரிய பேசு பொருளாக இணையத்தில் உலாவி வருகிறது.

அதாவது இது கலிகாலம், வெறுப்ப ஓங்கி நிக்கிற காலம். கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க தம்பிகளா என்ன காலி பண்ணனும் நினைச்சா ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது. தீபந்தம் போல என் ரசிகர்கள் உள்ளவரை நான் மேலே போய்கிட்டே இருப்பேன் என்று ஆவேசமாக தனுஷ் பேசியிருந்தார்.

இது இணையத்தில் ட்ரோலும் ஆனது. தனுஷ் இவ்வளவு கோபத்துடன் யாரை பேசுகிறார். நயன்தாரா, சிவகார்த்திகேயன், அனிருத் இவர்களைப் பற்றி தான் பேசி உள்ளாரா என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகள் போட்டு வருகிறார்கள்.

தனுஷை விமர்சித்த சினிமா விமர்சகர்

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் தனுஷ் பயந்து மறைத்து பேசுவதாக கூறியிருக்கிறார். அதாவது யாரை எதுக்காக சொல்கிறார் என்று யாருக்குமே புரியலை. நயன்தாராவை சொல்றாருன்னு ஒரு குரூப்பும், சின்ன தளபதி அதாவது சிவகார்த்திகேயனை திட்றாரு என ஒரு குரூப்பும் சொல்லி வருகிறது.

தனுஷுக்கு வெளிப்படையா பேச தைரியமும் இல்ல, பேசாம இருக்கவும் முடியல, ஒரே தமாசு தான் போங்க. ஆடியோ லான்ச் விழாவை ஒரு ரசிகர் மன்றமா மாத்துறதே வேலையா போச்சு. படத்துல பொழுதுபோக்கு இல்லைனாலும் நடிகர்கள் இது மாதிரி மேடைப்பேச்சு செம என்டர்டெயின்மெண்டா இருக்கு.

மேலும் தனுஷின் மேடை பேச்சு, மேனரிசம் எல்லாம் ரஜினி பாணியில் இருக்கிறது என்றும் வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவ்வாறு ப்ரோமோஷன் செய்த தனுஷின் படம் எப்படி இருக்கிறது என்று இன்று பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →