கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாகும் சினிமா விமர்சகர்கள்.. வாரிசு வசூலை உடைக்க செய்த சதி

நேற்றைய தினம் இணையத்தையே அல்லோலப்படுத்தியது வாரிசு மற்றும் துணிவு படத்தின் விமர்சனங்கள் தான். தமிழ் சினிமாவில் இப்போதைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களுக்குள் போட்டியாக பார்க்கப்படுவது விஜய் மற்றும் அஜித் தான். இந்த இரு நடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே ரசிகர்கள் ஏழரையை இழுப்பார்கள்.

இப்போது ஒரே நாளில் வெளியானால் சொல்லவா வேண்டும். இந்நிலையில் நேற்று துணிவு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும், வாரிசு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் தொடர்ந்து இணையத்தில் அதிகமாக வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இப்போது டிக்கெட்டின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் நாம் ஒரு படத்திற்காக செலவிடும் நேரம் மற்றும் பணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது பெரும்பாலான ரசிகர்கள் சினிமா விமர்சனத்தை பார்த்து விட்டு தான் தியேட்டருக்கு செல்கிறார்கள். ஆகையால் தற்போது யூடியூப் சேனலில் பல சினிமா விமர்சகர்கள் தலை தூக்கி உள்ளனர்.

அந்த வகையில் ரசிகர்கள் பெரும்பாலானோர் ப்ளூ சட்டை மாறன், வெப் ஸ்பீச் போன்ற சில விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு செல்கிறார்கள். இந்நிலையில் வாரிசு படம் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவந்துள்ளது.

விஜய் பொறுத்த வரையில் வாரிசு படத்திற்கு பக்காவாக பொருந்தி உள்ளார். படத்தில் ஒரு சில மைனஸ் இருந்தாலும், எல்லா மக்களுக்குமே பிடிக்கும் படியாக தான் வாரிசு படத்தை வம்சி எடுத்துள்ளார். ஆனால் சினிமா விமர்சகர்கள் சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வாரிசு படத்தை மிகவும் மோசமாக விமர்சித்து உள்ளனர்.

அவர்களின் விமர்சனத்தினால் வாரிசு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைய தொடங்கியது. ஒரு படம் எடுக்க அதில் பல பேருடைய உழைப்பு உள்ளது. அதுவும் வாரிசுப் படத்தில் ஒரு நல்ல விஷயம் கூடவா இல்லை. அவ்வளவு மோசமாக இந்த படத்தை சினிமா விமர்சகர்கள் வச்சு செய்துள்ளனர். வாரிசு படத்தின் வசூலை குறைக்க வேண்டும் என்ற சதி திட்டத்தால் இவ்வாறு செய்துள்ளார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →