நடிகர் சூர்யாவின் 42 வது திரைப்படமான வணங்கான் திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன்பின் இத்திரைப்படத்தின் எந்த ஒரு அப்டேட்களும் வராத நிலையில், ரசிகர்கள் வணங்கான் படத்தின் அப்டேட்களை இணையத்தில் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
ஏற்கனவே நடிகர் சூர்யாவுக்கும், இயங்குனர் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யா பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்றார். அதன்பின் பல சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தார்.
இதனிடையே அண்மையில் இயக்குனர் பாலா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர்கள் பாலாவிடம் எப்படி வந்து இருக்கு சார் என கேட்டதற்கு பாலா மழுப்பலான ஒரு சிரிப்புடன் வந்திருக்கு இல்ல வந்துகிட்டு இருக்கு என நக்கலாக கூறினார். பின்னர் பத்திரிகையாளர் உங்களுக்கும், சூர்யாவுக்கும் பிரச்சனையா என கேட்டதற்கு அதற்கும் சிரித்துக்கொண்டே எது நமக்கு பிரச்சனையா என மாற்றி பத்திரிக்கையாளர்களை நக்கல் அடித்தார்.
இதிலிருந்தே இன்னும் சூர்யாவிற்கு பாலாவிற்கும் பெரிய கருத்து வேறுபாடுகள் நிலவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்க உள்ள திரைப்படத்திலும் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சூர்யா செல்லாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி வணங்கான் திரைப்படத்தின் அப்டேட்களுக்கும் , ரிலீசுக்கும் வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குனர் பாலா இந்த வருடத்தில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், சூர்யாவின் திரைப்படத்தை இயக்கி சற்று ஆறுதலை தேடலாம் என நினைத்திருந்தார். ஆனால் அதிலும் அவருக்கு மிகப்பெரிய அடியாக விழுந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இயக்குனர் பாலா தனது கெத்தை எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதில் தீவிரமாக முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.