கலர் ஜட்டி கேட்டு பிக் பாசை மிரட்டிய போட்டியாளர்.. நான் அவனிடம் சிக்கல, அவன் தான் என்கிட்ட சிக்கிருக்கான்!

கடந்த வாரம் விஜய் டிவியில் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் முதல் போட்டியாளராக களமிறங்கிய டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து முதல்நாளே கமலஹாசனுடன் அடித்த லூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அதைத்தொடர்ந்து அவர் நாள்தோறும் நிகழ்ச்சியில் காட்டுகிற அலப்பறைக்கு அளவே இல்லாமல் போகிறது. இதனால் பெண் போட்டியாளர்களும் ஜிபி முத்துவை தான் மொய்க்கின்றனர். ஏனென்றால் அவர் செய்யும் சேட்டைகள் தான் பெரும்பாலும் ஒளிபரப்பாகும் என்பதை அவர்களே முடிவெடுத்து விட்டனர்.

அதிலும் தற்போது ‘வெள்ளை ஜட்டி தான் வந்திருக்குது. கலர் ஜட்டி வேண்டும்’ என்று கேமரா முன்பு நின்று அழிச்சாட்டியம் பண்ணுகிறார். இவருடன் சேர்ந்து மாடல் அழகிகளும் தங்களுக்கு மேக்கப் கிட் வேண்டும், ஷூ வேண்டும் என்றும் பட்டியலிடுகின்றனர்.

எனவே நான் அவனிடம் சிக்கலை அவன் தான் என்கிட்ட சிக்கி இருக்கான் என்கின்ற அளவுக்கு பிக் பாஸுக்கே தண்ணி காட்டுகிறார் ஜிபி முத்து என்று சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். எனவே அவருக்கு இந்த சீசனில் தனி ஆர்மியே உருவாகியிருக்கிறது.

மேலும் இவருடைய வெகுளித்தனமான  பேச்சும், நகைச்சுவையும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. எதார்த்தமாக அவர் பேசுவதே பயங்கர காமெடியாக இருக்கிறது. மேலும் இந்த சீசனை என்டர்டைன்மென்ட் ஆக வைப்பதில் ஜிபி முத்துவின் பங்கு அதிகமாக இருக்கும்.

முன்பு யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலுக்கு செல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜிபி முத்து இல்லாத ஒரு ப்ரோமோ கூட வெளிவருவதில்லை. அந்த அளவுக்கு இவர் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →