நாங்க என்ன பிச்சைக்காரர்களா.? லால் சலாம் நடிகையை வெளுத்து விட்ட ப்ளூ சட்டை, தலைவலியில் ஐஸ்வர்யா

Controversy sparks by Lal Salaam Movie actress: சினிமாவில் தலைவருடன் சேர்ந்து நடிப்பதற்கு எத்தனையோ நடிகைகள் தவமாய் தவமிருக்கும் போது, தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என சொன்ன இந்த நடிகையை போய் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்களே என பலரும் கொந்தளிக்கின்றனர். லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது.

இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை சங்கி கிடையாது என காட்டமாக பேசினார். ஆனால் தலைவரை சங்கி இல்லை என்று கூறிய ஐஸ்வர்யா எதற்காக தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிகை தன்யா பாலகிருஷ்ணனை தேர்வு செய்தார் என்று கொந்தளிக்கின்றனர். ஏனென்றால் தமிழில் நிறைய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன், சில வருடத்திற்கு முன்பு CSK Vs RCB அணிக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியை பற்றி அவர் போட்ட ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அதில், ‘தமிழர்கள் தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். இவருக்கு எதிராக ‘ஹேட் தன்யா’ என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. கடுப்பான இவர், ‘இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்’ என சபதம் போட்டார்.

லால் சலாம் நடிகையால் வெடிக்கும் சர்ச்சை

ஆனால் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள லால் சலாம் படத்தின் கதாநாயகியே தன்யா பாலகிருஷ்ணன் தான் . எத்தனையோ நடிகைகள் இருக்கும் போது தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் எனக் கூறியவரை எதற்காக தலைவர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன்? நாங்க என்ன பிச்சைக்காரர்களா? என்று ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளுத்து வாங்கி உள்ளார். ஆனால் சினிமா ரசிகர்கள் இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்க கூடாது. இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே அவர்களுடைய வேலை. என்ஜாய்! என்றும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →