சிவாஜியின் அன்னை இல்லத்தை காப்பாற்ற பிரபு போட்ட போடு.. பேரன் துஷ்யந்த்தால் குடும்பத்துக்கு பிடித்த தலைவலி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் ஒன்றானஅன்னை இல்லத்தை ஜப்தி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனை எதிர்த்துப் போட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.பிரபு தரப்பு இதற்கு எதிராக வாதாடி வருகிறது. தி நகரில் தெற்கு போக் சாலையில் உள்ளது சிவாஜி கணேசனின் வீடு

பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகனான துஷ்யந்த், சக்சஸ், மச்சி, தீர்க்கதரிசி, போன்ற படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தை தயாரிக்தும் உள்ளார். இப்பொழுது இவரால், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஏலத்துக்கு வந்துள்ளது.

எம்ஜிஆர்க்கு ராமாபுரம் தோட்டம், கலைஞருக்கு கோபாலபுரம், ஜெயலலிதா அம்மையாருக்கு போயஸ் கார்டன் இப்படி பல அடையாளங்கள் இருக்கிறது. சிவாஜி கணேசனின் அடையாளம் தி நகரில் உள்ள அன்னை இல்லம் தான். இந்த வீடு இருக்கும் தெருவிற்கு செவாலியே சிவாஜிகணேசன் தெரு என சென்னை மாநகராட்சி பெயர் கொடுத்தது.

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் வாரிசு துஷ்யந்த். இவரும், இவரது மனைவி அபிராமியும் ஜகஜால கில்லாடி என்ற ஒரு படத்தை தயாரித்து வந்தனர். இவர்கள் ஈசன் ப்ரொடக்ஷன் என்ற ஒரு நிறுவனமும் நடத்தி வந்தனர். இந்த படம் தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்ற நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சங்கள் கடன் வாங்கியுள்ளனர்.

இப்பொழுது அந்த கடன் தொகையை மொத்தமாக 9 கோடிகள் 39 லட்சம் கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டது. இதனால் இதனை எதிர்த்து பிரபு தரப்புவழக்கு தொடர்ந்து உள்ளது. 9 கோடி கடனுக்காக 150 கோடி வீட்டை ஜப்தி செய்வதா என பிரபு போராடி வருகிறார். இந்த வீட்டில் தன் பங்கும் இருக்கிறது அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனுக்காக தான் உதவ முடியாது எனவும் மறுத்து வருகிறா.ர்

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment