Ajith : இரும்பு மனிதனாக வலம் வரும் அஜித்.. இதுவரை AK-க்கு நடந்த 7 அறுவை சிகிச்சை, எந்தெந்த இடத்தில் தெரியுமா?

வைராக்கியம் மற்றும் ஈடுபாடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் அஜித். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்தின் உடம்பில் இத்தனை ஆபரேஷன்களா என வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அதாவது ரேஸ் மீது வெறியாக இருக்கும் அஜித் பல விபத்துகளையும் சந்தித்து இருக்கிறார். இதனால் அவரது உடம்பில் பல தையல்கள் போடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக கிட்டத்தட்ட ஏழு அறுவை சிகிச்சை அஜித்துக்கு நடந்திருக்கிறது. மேலும் மைனர் ஆப்ரேஷன்கள் நிறைய அஜித்துக்கு நடந்திருக்கிறது. அந்த வகையில் மூன்று ஆப்ரேஷன் அஜித்தின் முதுகு பகுதியில் நடந்திருக்கிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து

சோல்டர் பகுதியில் இரண்டு ஆபரேஷன் நடந்துள்ளது. மேலும் காலின் முட்டி பகுதியில் அஜித்துக்கு ஒரு ஆபரேஷன் நடந்திருக்கிறது. மேலும் சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் காதுக்கு கீழே சின்ன மைனர் ஆப்ரேஷன் அஜித்துக்கு நடந்தது.

இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பும் சில காலம் தாமதமானது. அஜித்தின் பெரும்பாலான ஆப்ரேஷன் அவர் கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நடைபெற்றது. அதோடு படப்பிடிப்பிலும் சில காயங்கள் அஜித்துக்கு ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் கூட சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அப்போது கார் கவிழ்ந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். நூல் இலையில் அதிர்ஷ்ட வசமாக ஆரவ் மற்றும் அஜித் இருவரும் உயிர் தப்பி இருந்தனர். மேலும் ரசிகர்களுக்காக உடம்பில் இத்தனை காயங்கள் இருந்தாலும் அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →