பிக் பாஸில் தனலட்சுமி வாங்கிய சம்பளம்.. கொடுத்த கன்டென்ட்டுக்கு கம்மிதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரங்கள் போக போக ஒவ்வொரு ஆட்களாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்ட ஜனனி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்த இந்த வாரம் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆரம்பத்தில் மிகுந்த கோபமான சுபாவம் கூடியவராக பார்க்கப்பட்ட தனலட்சுமி அடுத்தடுத்த வாரங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றார். எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாக பார்க்கப்பட்டார்.

அதேபோல் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் அதிக கன்டென்ட் கொடுத்த பட்டியலில் தனலட்சுமி பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. ஏனென்றால் தனலட்சுமி பைனல் லிஸ்டில் இடம் பெறுவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் 76 நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்போது தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு தனலட்சுமிக்கு 15000 சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 76 நாட்களுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக தனலட்சுமி பெற்றுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் தனலட்சுமி கொடுத்த கன்டென்டுக்கு இந்த சம்பளம் கம்மி தான் என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்ட தனலட்சுமிக்கு வெள்ளித்திரையில் படம் வாய்ப்பு வர உள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவர் சினிமாவில் ஜொலிக்கலாம்.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிறைவு பெற இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →