ஹிந்திக்கு போனாலும் இளஞ்சிட்டுக்கு பொறி வைத்த தனுஷ்.. பல வலைகளை தாண்டி சிக்க போகும் பைங்கிளி

தனுஷ் தற்சமயம் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறார். இவர் இயக்கிய இட்லி கடை படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. 100 கோடி வசூலை பார்த்த ராயன் படத்தால் சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம் இவருக்கு துண்டு போட்டு வருகிறது.

இவர் நடிப்பில் கூடிய விரைவில் குபேரன், இட்லி கடை படங்கள் வெளிவர இருக்கிறது. இப்பொழுது “Tere ishq mein” என்ற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். டெல்லி, ஹரியானா, வாரணாசி என இந்தி படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. தனுஷ் அங்கு தான் முகாமிட்டிருக்கிறார்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்து தனுஷ் ஐசரி கணேஷ் தயாரிப்பில், போர் தொழில் டைரக்டர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் இப்பொழுது ஹீரோயினாக மம்தா பஜ்லு நடிக்க உள்ளார். இந்தப் படம் ஜூன் 1 சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது.

ஜனநாயகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பஜ்லு. விஜய் படம் என்பதால் பல படங்களில் கமிட்டாகி இருந்த இவர் அதை எல்லாம் நிராகரித்து விட்டு இந்த படத்திற்கு வந்துவிட்டார். விஜய்க்கு தங்கச்சியோ அல்லது மகள் கதாபாத்திரத்திலையோ இப்பொழுது நடித்து வருகிறார்.

மம்தா பஜ்லு இப்பொழுது கைவசம் 4 முதல் 5 தமிழ் படங்கள் வைத்திருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் அவர் தனுஷ் படத்தில் சிக்குவாரா என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் தனுஷ் வலை விரித்துவிட்டார் இளஞ்சிட்டை தூக்காமல் விடமாட்டார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். ஒரு படத்துக்கு இரண்டு கோடிகள் சம்பளம் வாங்கி வருகிறார் மம்தா.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment