நயனுக்கு கொடுத்த பதிலடியா.. தனுஷின் ஆவேசத்திற்கு காரணம் என்ன.?

Dhanush: தனுஷ் எப்போதுமே சோசியல் மீடியாவில் மிகப்பெரும் கன்டென்ட் ஆக இருக்கிறார். எந்த குடும்பத்தில் விவாகரத்து நடந்தாலும் எல்லோர் பார்வையும் இவர் பக்கம் தான் திரும்பும்.

அந்த அளவுக்கு இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் அவர் இதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. இவருடைய பட இசை வெளியீட்டு விழாவின் போது கூட அவர் பெரிதாக இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.

இருப்பினும் போயஸ் கார்டன் வீடு பற்றி ராயன் பட விழாவில் பேசி இருந்தார். அதை அடுத்து தற்போது குபேரா இசை வெளியீட்டு விழாவில் பல விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தனுஷின் ஆவேசத்திற்கு காரணம் என்ன.?

சற்று காட்டமாகவே இருந்த அவருடைய பேச்சு தான் இப்போது மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு கோவமா பேசுனதுக்கு பின்னாடி இவங்க இருப்பாங்களோ அவங்க இருப்பாங்களோ என ஆளாளுக்கு ஒரு கதை பரப்பி வருகின்றனர்.

ஆனால் நயன்தாரா வெளிப்படையாக அறிக்கை விட்டு தனுஷ் இமேஜை டேமேஜ் செய்ய பார்த்தார். அதை அடுத்து ஆர்த்தி ரவி விவாகரத்து பிரச்சனையிலும் இவர் தலை உருண்டது.

இது எல்லாவற்றுக்கும் பதிலடியாக தான் என்னை அசைக்க முடியாது. ஓரமா போய் விளையாடுங்க ஒரு செங்கலை கூட உருவ முடியாது என தனுஷ் பேசியதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.

உண்மையும் அதுதான். எல்லா நேரத்திலும் அமைதியாக இருப்பது சரிப்பட்டு வராது. இது திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் என அவர் நினைத்திருக்கலாம். அதனாலேயே பதிலடி கொடுக்க தயாராகி விட்டதாக வலைப்பேச்சு அந்தணன் உட்பட பலர் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ இப்போது அவர் பேசியதை வைத்து பல பேர் கன்டென்ட் எடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் தனுஷின் இந்த பேச்சு தரமான பதிலடி தான்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →