தயாரிப்பாளருக்கு கை நிறைய அள்ளி கொடுத்ததா குபேரா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Kuberaa First Day Collection: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று குபேரா வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இதில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு வழக்கம் போல பாராட்டுகளை பெற்ற நிலையில் தேசிய விருது கிடைக்கும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் தனுசுக்கு எதிர் தரப்பினர் படத்தை குறை சொல்லி ட்வீட் போட்டு வருகின்றனர். இது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் டாப் ஹீரோக்கள் சந்திக்கும் பிரச்சனைதான்.

முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

இருந்தாலும் குபேரா படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி இருக்கும் இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி காண்போம்.

டிக்கெட் புக்கிங் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் கூட முதல் நாளான நேற்று குபேரா தமிழ்நாட்டில் 4.30 கோடிகளை வசூலித்துள்ளது. அதேபோல் தெலுங்கில் 8.75 கோடி வசூல் ஆகி இருக்கிறது.

ஆக மொத்தம் முதல் நாள் மட்டுமே குபேரா 13 கோடிகளை அள்ளி இருக்கிறது. இது அவ்வளவு மோசம் இல்லாத வசூல் தான். விடுமுறை அல்லாத நாள் என்பதால் இந்த வசூல் இருக்கலாம்.

ஆனால் வார இறுதி நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது. ஆக மொத்தம் குபேராவால் தயாரிப்பாளர் இப்போது ஹாப்பி தான்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →