தனுஷுடன் நடிக்க மறுக்கும் 3 நடிகைகள்.. பச்சோந்தி வேலையை பார்த்த பிரபலம்

தனுஷ், தான் இயக்க இருக்கும் திரைப்படத்திற்காக கதாநாயகி தேர்தலிலேயே மூக்கை அறுத்துக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறியுள்ளது.

நடிகர் தனுஷ், தனது முன்னாள் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததற்கு பின் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் சரிந்துள்ளது. தனுஷ் எந்த ஒரு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து படங்களை கொடுப்பதில்லை என்று கோலிவுட்டில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தனுஷ் தன் கையிலுள்ள நானே வருவேன், திருச்சிற்றம்பலம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு பின், தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்து அவரே இயக்கும் படத்திற்கு அவரே நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரிப்பில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கு முதன்முதலாக, கதாநாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும், பாலிவுட்டின் நடிகை ஜான்வி கபூர் அணுகியுள்ளார். ஆனால் அதற்கு போனிகபூர் என் மகளை உன்னுடன் நடிக்க வைக்க மாட்டேன் என தெரிவித்து தனுஷை அவமானப்படுத்தினார்.

மேலும் டான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா மோகனிடம் தனுஷ் அணுகியபோது, சிவகார்த்திகேயன் நடுவில் புகுந்து நீங்கள் தற்போது தான் சினிமாவில் வளர்ந்து வருகிறீர்கள், இப்போது தனுஷூடன் நடித்தால் உங்களது மார்க்கெட் சரிந்து விடும் என பிரியங்கா மோகனிடம் மூளைச்சலவை செய்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியை, தான் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க அணுகியுள்ளார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள சூர்யா 41 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாலா மற்றும் சூர்யாவின் கருத்துவேறுபாடால் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதனிடையே கீர்த்தி ஷெட்டி தனுஷுடன் முதல்முதலாக தமிழில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம். மேலும் எந்த ஒரு முன்னணி நடிகையும் நடிக்க முன்வராமல் இருப்பது, தனுஷின் மார்க்கெட் மேலும் சரிந்துவருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →