மாஸ் ஹீரோனா தளபதியை பார்த்து கத்துக்கோங்க.. தில் ராஜு இப்படி புகழ்ந்து பேச காரணம் இதுதான்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். துணை நடிகர்கள் முதற்கொண்டு டெக்னீசியன்கள் வரை அனைவரிடமும் இயல்பாக பழகும் அவரை அனைவருக்கும் பிடிக்கும். தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அதற்காக அடிக்கடி ஹைதராபாத் சென்று வருகிறார்.

தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு அதன் மூலம் தெலுங்கு நடிகர்களுக்கும் ஒரு குட்டு வைத்துள்ளார்.

அதாவது தெலுங்கு திரையுலகில் இருக்கும் பிரபல நடிகர்கள் படப்பிடிப்பிற்காக வெளி மாநிலம் செல்லும் சூழல் வந்தால் தனி விமானம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் செலவாக இருக்கிறது. ஆனால் விஜய் அப்படி கிடையாது.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் கிடைக்கும் விமானத்தில் ஏறி ஹைதராபாத் வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறாராம். அவ்வளவு எளிமையாக இருக்கும் விஜய்யை பார்த்து தெலுங்கு நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வெளிப்படையாகவே புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வகையில் அவர் கூறுவதும் உண்மைதான். ஏனென்றால் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் கூட இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட சில நட்சத்திரங்கள் தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு சென்றார்கள்.

இது அனைத்திற்கும் தயாரிப்பாளர்கள் தான் செலவு செய்கின்றனர். அப்படி பார்த்தால் கோடி கணக்கில் சம்பளம் கொடுப்பது மட்டுமல்லாமல் இது போன்ற இதர செலவுகளையும் அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அதை தாங்க முடியாமல் தான் தில் ராஜு தற்போது தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →