விஜய்யின் வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட தில் ராஜு.. எதிர்பாராத அதிர்ச்சியில் தளபதி

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய்க்கு நீண்ட நாட்களாகவே நம் சினிமா தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பெரிய ஆசை இருந்து வருகிறது.

கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டிருந்த காலத்தில் பல தொழிலாளர்களும், துணை நடிகர்களும் பிழைப்புக்கு வழி இன்றி பெரிதும் கஷ்டப்பட்டனர். அந்த சமயத்தில் பல பெரிய நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை எப்படியோ காப்பாற்றிவிட்டனர்.

அதன்பிறகு கொரோனா முடிந்து ஷூட்டிங் ஆரம்பித்த பிறகுதான் பல துணை நடிகர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதனால் விஜய் இப்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மேலும் முடிந்த அளவுக்கு தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அதனால்தான் அவர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் முடிந்தமட்டும் சென்னையிலேயே படத்தின் ஷூட்டிங்கை செய்யுமாறு பரிந்துரை செய்து வருகிறார். அதேபோல் பீஸ்ட் திரைப்படத்திற்கும் சென்னையில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ஆனால் சில பல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அடுத்து தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தையாவது சென்னையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்த விஜய் அதுபற்றி தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இப்பொழுது படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தான் போய் கொண்டிருக்கிறது.

இதுதான் எங்களுக்கு வசதியாகவும் இருக்கிறது. அதனால் சென்னையில் ஷூட்டிங் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் ஹைதராபாத் தான் சரிப்பட்டு வரும் என்று அவர் விஜய்யின் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். எப்படியும் இந்த படத்தின் சூட்டிங்கை சென்னையில் வைத்து விடலாம் என்று நினைத்த விஜய்க்கு தயாரிப்பாளரின் இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →