நடிகையை கதற விட்ட இயக்குனர் பாலா.. சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓட்டம்

இயக்குனர் பாலாவின் படைப்புகள் எப்பவுமே மிக வித்தியாசமானதாக இருக்கும். மேலும் இவர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரொம்பவே கஷ்டப்பட்டு நடிக்க வேண்டி வரும். இதனாலேயே பலர் பாலாவின் திரைப்படங்களில் நடிக்க விரும்புவது இல்லை.

இயக்குனர் பாலாவின் பிதாமகனும், நான் கடவுள் திரைப்படமும் தேசிய விருது பெற்றது. பாலாவின் கதைகள் பெரும்பாலும் நாவல்களை தழுவியே இருக்கும். பாலாவின் படைப்புகள் என தனியாகவே இவருடைய படங்களை லிஸ்டில் சேர்த்து விடலாம்.

இயக்குனர் பாலாவின் முதல் படம் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது. இந்த படம் தான் விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்தது. பாலா மற்றும் விக்ரமுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா நடித்தார்.

அபிதா சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்து கொண்டிருந்தார். அப்போது தான் அபிதாக்கு சேது பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு காட்சியில் அபிதாவுக்கு ஆடவே தெரியவில்லையாம், கடைசியில் நடனம் இல்லாமலே அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள்.

இதற்காக பாலா அபிதாவை பயங்கரமாக திட்டி இருக்கிறார். இதனால் அவர் பயங்கரமாக அழுது இருக்கிறார். அடுத்த நாள் படப்பிடிப்புக்கே செல்ல மாட்டேன் என்று புலம்பி இருக்கிறார், பிறகு அவருடைய குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சேது பட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து இப்போது உச்ச நடிகராக இருக்கிறார். ஆனால் அபிதாவை அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு அபிதா சன் டிவியில் ‘திருமதி செல்வம்’ நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அபிதா தன்னுடைய சேது பட அனுபவங்களை பற்றி பகிர்ந்திருந்தார். மேலும் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு முக்கிய பத்திரிக்கை தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →