தரமான வெற்றி.. ஒரு வருடம் முடிவுக்கு ட்ரீட் கொடுத்து அசத்திய தனுஷ் இயக்குனர்!

தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்துகிறார். அவர் நடிப்பில் மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனி இடம் பிடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘நானே வருவேன்’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது விவாகரத்து பிரச்சனையினால் சிறிது மன உளைச்சலில் இருந்த தனுஷ் தற்போது மீண்டும் தனது நடிப்பை தொடங்கியிருக்கிறார்.

அதற்காகவே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு மன பாரத்தை குறைத்து வருகிறார். ஒருகாலத்தில் தனுஷுக்கு வெற்றிமாறன், பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், அசுரன் போன்ற நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கிய படம்தான் கர்ணன்.

இந்த படம் 1995 ஆம் ஆண்டு கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

கர்ணன் திரைப்படம் கொரோனா காலத்தில் வெளிவந்து திரையரங்கில் அசால்ட் காட்டி மாபெரும் வெற்றியடைந்தது. அந்த படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆகியது. அதனால் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரையும் அழைத்து மாரி செல்வராஜ் ஒரு விருந்து கொடுத்துள்ளார்.

கிரீன் பார்க்கில் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருந்து விழாவில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் கூப்பிட்டு கௌரவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பரிசுப் பொருட்களையும் கொடுத்து அசத்தியுள்ளார் மாரிசெல்வராஜ்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →