அஜித்திற்காக எடுக்கப்பட்ட 3BHK படம்.. AK-யின் தீவிர பக்தன் ஸ்ரீ கணேஷ் சொல்லும் காரணங்கள்

எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கியவர் தான் ஸ்ரீ கணேஷ். இவர் தற்போது 3BHK என்ற படத்தை இயக்கி வரும் ஜூலை 4-ம் தேதி வெளியிட காத்திருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், யோகி பாபு, மேத்தா ரகுநாத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சமூகத்தில் ஜெயிக்கின்றனர் என்பதை எதார்த்தமாக எடுத்துள்ளாராம். ஃபேமிலி சென்டிமென்ட், எமோஷனல் கனெக்ட் என்று ரசிகர்கள் விரும்பும்படியான ஸ்கிரீன் ப்ளே வைத்து ஏற்கனவே எடுத்த படங்களை விட வித்தியாசமாக இந்த படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஸ்ரீ கணேஷ் அஜித்தின் பக்தன் போல் அவருக்கு ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன். இந்த படம் எல்லாம் ஒரு ட்ரையல் மாதிரி அதாவது அஜித்தை வைத்து இயக்குவதற்கு இது ஒரு பேஸ்மென்ட் பல நூறு கோடி முதலீட்டில் ஒரு ப்ராஜெக்ட் எடுத்தோம்னா அதை சக்சஸ்ஃபுல்லா பண்ணனும்.

அதுவும் அஜித் சார் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்குவது அவ்வளவு எளிதல்ல. அஜித் சார் மாதிரி ஒரு ஹீரோவை வைத்து படம் எடுப்பதற்கு அந்த இடத்தை, அந்த தகுதிய நான் வளர்த்துக்கணும். அதற்காக ஓடிக்கிட்டே தான் இருப்பேன். இன்னும் பல படங்கள் இயக்கிவிட்டு அஜித் சாரை வைத்து ஒரு படம் இயக்குவது தான் என்னது வாழ்நாள் கனவு என்று ஸ்ரீ கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் போல இப்படி ஒரு வெறி பிடித்த இயக்குனர் இருப்பதை ஓபனாக தெரிவித்துவிட்டார். அஜித்திற்கு ஒரு கதை வைத்திருப்பதாகவும் இந்த பேட்டியை பார்த்து அஜித் கூப்பிட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் விரைவில் இந்த கூட்டணி இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 300-400 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு ஸ்ரீ கணேஷ் இன்னும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 3BHK படம் சக்சஸ் ஆக வேண்டும் என்பதற்காக சினிமாபேட்டை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →