3 புருஷனை டீலில் விட்ட டாக்டர் நடிகை.. அந்தரங்க விஷயத்தை போட்டு உடைத்த பயில்வான்

பயில்வான் ரங்கநாதன் பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டு தனது யூடியூப் சேனலில் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் திரைத் துறையில் உள்ள பிரபலங்கள் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் எதர்ச்சியாக ராதிகா பயில்வானை கடற்கரையில் சந்திக்கும் போது விலாசி தள்ளி இருந்தார். இதைத்தொடர்ந்து இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பயில்வனை நடுரோட்டில் நார் அடித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் பற்றி சற்றும் கவலைப்படாத பயில்வான் தொடர்ந்து அவர்களின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் மற்றும் சின்னத்திரை நடிகையான ஷர்மிளா பயில்வனை விமர்சித்திருந்தார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பயல்வான் ஷர்மிளாவின் அந்தரங்க விஷயங்களை தற்போது தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதாவது ஷர்மிளா எந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

விஜய் டிவியில் 11 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பலான நிகழ்ச்சியான புதிரும் புனிதமும் நிகழ்ச்சியின் மூலம் தான் இந்த ஷர்மிளா பிரபலமானார். டாக்டர் மாத்ருபூதம் இடம் நேயர்கள் கேட்கும் கேள்வியை ஷர்மிளா படித்து சொல்வார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் எல்லோருக்கும் பரிச்சயமானார்.

மேலும் ஷர்மிளா மூன்று திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து விட்டார். நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. எல்லாமே விக்கிபீடியாவில் இருக்கிறது என டாக்டர் ஷர்மிளாவை பயில்வான் வறுத்தெடுத்துள்ளார்.

நான் தான் பத்திரிக்கையாளர் அதனால் யூடியூப் சேனல் நடத்தி சம்பாதித்து வருகிறேன். நீங்கள் தான் டாக்டர் ஆச்சே கிளினிக் நடத்தி அதன் மூலம் சம்பாதிக்கலாமே, தேவையில்லாமல் யூடியூப் சேனல் ஏன் நடத்துகிறீர்கள். நீங்கள் சினிமாவுக்கு வந்ததே பணத்துக்காகவும், புகழுக்காகவும் தானே என ஷர்மிளாவை விளாசி எடுத்துள்ளார் பயில்வான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →