கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத சந்தோஷம்.. போட்டி போட்டு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய், VP

Actor Vijay: சோசியல் மீடியாவை திறந்தாலே விஜய் பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. அந்த அளவுக்கு அவருடைய ஆதிக்கம் கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது.

ஒரு பக்கம் கோட் படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மறுபக்கம் கேரளாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் விஜய்க்கு கிடைத்த அமோக வரவேற்பு மலைக்க வைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு மற்றும் கேரளா டாப் ஹீரோக்கள் இதை பார்த்து வாயடைத்து தான் போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு தளபதியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர்.

சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

அதில் எத்தனையோ நெகிழ்ச்சியான சம்பவங்கள் இருந்திருந்தாலும் பலரையும் கவனிக்க வைத்த ஒரு சம்பவமும் இருக்கிறது. அதாவது விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

அதில் ஊனமுற்ற சிறுவன் அவரைப் பார்க்க வீல் சேரில் காத்திருக்கிறான். விஜய் குழந்தையை பார்த்து சிரிப்பு பேசிய போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

குழந்தையின் முகத்தில் இருக்கும் சிரிப்பு

அதிலும் தளபதியை பார்த்த சந்தோஷத்தில் அந்த குழந்தையின் முகத்தில் இருக்கும் சிரிப்பு நிச்சயம் விலை மதிக்க முடியாதது. இதற்கு ஈடாக எவ்வளவு பணம் கொடுத்தாலும் பத்தாது.

அந்த போட்டோவை தற்போது விஜய்யின் ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் கோட் படத்தின் போஸ்டர் ஒன்றும் ட்ரெண்டாகி வருகிறது.

கோட் படத்தின் போஸ்டர்

அதில் லோகேஷ் பாணியில் வெங்கட் பிரபு விஜய் உடன் கை கோர்த்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வெறித்தனமாய் இருக்குது. சீக்கிரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுங்கள் என கேட்டு வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →