இப்ப கூட சங்கீதா அண்ணி வந்துட்டு தான் போனாங்க.. வதந்திக்கு வைத்த முற்றுப்புள்ளி

Vijay : சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜய் தற்போது அரசியலுக்கு வந்தது வெறும் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது பல கட்சிகள், கூட்டணி போட்டுக் கொள்ளுமாறு விஜயிடம் வந்த கெஞ்சும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது.

சினிமாவில் இருந்த ஒரு நடிகன் அரசியலுக்கு வந்ததுமே அவனுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியம்தான். எம்ஜிஆர் திரை உலகத்தை விட்டு அரசியலுக்கு வரும் போது கிடைத்த அதே வரவேற்பு தான் தற்போது விஜய்க்கும் கிடைத்திருக்கிறது.

சினிமா வாழ்க்கையை விட்டு அரசியலுக்கு தாவியதும் விஜய் மனைவியை விட்டும் பிரிந்து விட்டார் என்ற பேச்சு தற்போது பரவி வருகிறது. “எப்படி அரசியலுக்கு வந்ததும் மனைவியே கைவிட்டுட்டு போறீங்க“, “த்ரிஷாவுக்காக தான் அவர் மனைவி சங்கீதாவை கைவிட்டார்“,

இந்த பொழப்பெல்லாம் தேவையா? “. இந்த மாதிரி பல்வேறு வகையான பேச்சுகள் தற்போது விஜயை குறிவைத்த தாக்கும் வகையில் பேசப்பட்டு வருகிறது. சினிமா வட்டாரத்தில் இது பேசும் பொருளாகவே மாறி உள்ளது.

உண்மையில் நடந்தது..

விஜயின் மகள் அமெரிக்காவில் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வருகிறார். தன் மகளே தனியே விட விருப்பம் இல்லாமல் சங்கீதாவும் அமெரிக்கா சென்றுள்ளார். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம்.

தயவு செய்து இந்த வதந்தியை பரப்ப வேண்டாம் என்று விஜயின் நலம் விரும்பி ஒருவர் கேட்டுள்ளார். “விஜய் தவறானவர் என்று சினிமாவிலும் அரசியலும் கலங்கத்தை ஏற்படுத்த இடையில் இருப்பவர்கள் இந்த வரண்டையே பரப்பி இருக்கலாம். சங்கீதா அண்ணி தற்போது கூட வந்துட்டு தான் போனாங்க”.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →