எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம் டிராப்.. ஷட்டரை சாத்திய ஜீ ஸ்டுடியோஸ்

சர்தார் 2, ஜெய்லர் 2, கைதி 2 என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் வரும்போது எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு படம் இப்பொழுது டிராப் ஆகி உள்ளதாம். அதற்கு காரணம் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பின்வாங்கியது தானாம்

OTTலேயே சக்க போடு போட்ட அந்த படம் இப்பொழுது பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தயாரிப்பாளர்கள் சேர்ந்து அந்த படத்தை எடுப்பதற்கு அடித்தளம் போட்டனர். ஆனால் பெரிய பட்ஜெட் ஆவதால் இப்பொழுது பிரபல நிறுவனம் ஒன்று பின்வாங்கியுள்ளது.

அந்த பெரிய நிறுவனத்தால் இப்பொழுது படம் டேக் ஆன் ஆகவில்லை. பா ரஞ்சத் இயக்கத்தில் OTTயில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சக்க போடு போட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஏற்கனவே முதல் பாகம் அடித்த சூப்பர் ஹிட்டால் இந்த பாகத்தை இன்னும் மெருகேற்றலாம் என பா ரஞ்சித் இதற்கு 100 கோடி வரை பட்ஜெட் வேணும் இன்று திட்டம் போட்டிருந்தார். ஆனால் அதுதான் இப்பொழுது இந்த படத்திற்கு எமனாய் அமைந்துள்ளது. சமீபத்தில் ஆர்யாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை.

சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு ஆர்யாவின் சொந்த நிறுவனமான, ஷோ பீப்பிள், அன்னபூரணி படம் எடுத்த நாட் ஸ்டுடியோஸ், மற்றும் ஜீ தமிழ் மூன்று பேரும் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தனர் ஆனால் 100 கோடி பட்ஜெட் என்றதும் ஜீ தமிழ் விலகியது இதனால் படமே டிராப்பாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment